Home /News /entertainment /

Thalapathy Vijay: ’விஜய்க்கு ஸ்டெப் போடுறது சவாலான விஷயம்’ - புகழும் நடன இயக்குநர்கள்!

Thalapathy Vijay: ’விஜய்க்கு ஸ்டெப் போடுறது சவாலான விஷயம்’ - புகழும் நடன இயக்குநர்கள்!

விஜய்

விஜய்

Thalapathy Vijay: ’பூமா தேவிக்கு வலிக்காம ஆடுற ஒரே ஆள் விஜய் தான்’

Thalapathy Vijay:  தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய், இந்த இடத்திற்கு வர நடிப்பு, நடனம், இசை, அதிரடி, திரை மொழி, உடல் மொழி என ஒவ்வொன்றிலும் தன்னை செதுக்கியிருக்கிறார். சின்ன குழந்தைகள் முதல் வயதான தாத்தா, பாட்டி வரை குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு நடிகரைப் பிடிக்கிறதென்றால் அது ரஜினிக்குப் பிறகு விஜய் தான்.

குறிப்பாக விஜய்யின் அழகான நடன அசைவுகளுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரைக்கும் நடனம் ஆடுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பாடல்களில் விஜய்க்கே முன்னுரிமை. சிலர் நடனமாடும் போது அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இதை ஆடுகிறார்கள் எனபதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். அவர்களின் உடல் மொழியே நமக்கு அதை உணர்த்திவிடும். ஆனால் விஜய்யிடம் இதை கண்டுப்பிடிக்கவே முடியாது. அவ்வளவு எளிதாகவும் இயல்பாகவும் இருக்கும் அவரது உடல்மொழி. நமக்கு தான் அப்படி தெரிகிறதா என்றால், இல்லை. பல நடன இயக்குநர்களே விஜய்யின் நடன திறமையை கண்டு அசந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

நடன இயக்குநர் கலா


மத்த நடிகர்கள் ஆடினா, ரசிகர்கள் அவங்களையும் பாப்பாங்க மத்த நடன கலைஞர்களையும் பாப்பாங்க, விஜய் சார் ஆடுனாருன்னா, எல்லாரும் அவர மட்டும் தான் பாப்பாங்க. அது அவருக்கே இருக்க ஸ்பெஷாலிட்டி.

நடன இயக்குநர் பிருந்தா

இவரா ஆடப் போறாருன்னு இருக்கும் அவ்ளோ சைலண்ட்டா உக்காந்துட்டு இருப்பார். நல்ல டான்சருக்கு தன்னோட அசைவுகளை இன்னும் எப்படி சிறப்பா கொடுக்கப்போறோம்ங்கற வேட்கை இருக்கணும். அது விஜய் கிட்ட நிறையவே இருக்கு. டேக் சொன்னதும் அவருக்கு ஒரு எனெர்ஜி வரும் பாருங்க, அதெல்லாம் ஆண்டவன் கொடுத்த கிஃப்ட் அவருக்கு. அதே மாதிரி நிறைய அர்ப்பணிப்பு உள்ளவர். அது இல்லாம இவ்ளோ நாள் தாக்குப்பிடிக்க முடியாது. அவருக்குன்னா என்ன மாதிரி வேணும்னாலும் ஸ்டெப்ஸ் கொடுக்கலாம். ஏன்னா அவர் பண்ணிடுவார்ன்னு நமக்கே தெரியும். இல்லன்னு ஒரு வார்த்தை அவர் கிட்ட இருந்து வராது.

நடன இயக்குநர் தினேஷ்

சொன்னதும் டக்குன்னு அந்த ஸ்டெப் போடுறது விஜய் சார் தான். என்னோட ரெண்டாவது படமான ஷாஜகான்ல இருந்து விஜய் சாரோட படங்கள்ல எப்படியாச்சும் ஒரு பாட்ல வேலை செஞ்சிடுவேன். நம்ம எதிர்காலத்துல பெரியாளாகலாம், ஆனா அதுக்கு ஒருத்தர் முக்கிய காரணமா இருப்பார் இல்ல, அதான் விஜய் சார். அதனால நிறைய முறை அவர நான் கடவுள்ன்னு சொல்லிருப்பேன். எனக்கு 2-வது படத்துல அவர் சான்ஸ் கொடுத்தது என் வளர்ச்சில ரொம்ப முக்கியமான ஒண்ணு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடன இயக்குநர் ஃபரா கான்

பாலிவுட் நடன இயக்குநரான ஃபரா கான் நண்பன் படத்தில் வரும் ஒல்லி பெல்லி பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். விஜய் குறித்து பேசிய அவர், சொன்ன நேரத்தில் கரெக்டாக செட்டில் இருப்பார். சில சமயம் இவர் ஏன் பாலிவுட்டுக்கு வந்து அங்கு இருக்கும் இளம் நடிகர்களுக்கு நடன பயிற்சியளிக்கக் கூடது என்று கூட நினைத்திருக்கிறேன். ரொம்ப மரியாதையானவர் விஜய்.

நடன இயக்குநர் ஷோபி

நான் பின்னணி நடன கலைஞரா இருக்கும் போதுல இருந்தே அவர் கூட நிறைய பாட்டுல ஆடிருக்கேன். அப்றம் உதவியாளரா ஒர்க் பண்ணிட்டு மாஸ்டராகி திருப்பாச்சி படத்துல ‘அப்பன் பண்ண தப்புல’ பாட்டு தான் நான் அவருக்கு பண்ண முதல் பாட்டு. அதே படத்துல ’கமான் கமான்’, சிவகாசில ’தீபாவளி தீபாவளி’, சச்சின்ல ’வாடி வாடி’, துப்பாக்கில ‘கூகுள் கூகுள்’, ‘அண்டார்டிகா’, ’குட்டிப்புலி கூட்டம்’, கத்தில ‘பக்கம் வந்து’, ‘ஆத்தி என நீ’, தெறில ‘செல்லாக்குட்டி, மெர்சல்ல ‘ஆளப்போறான் தமிழன்’, ‘மாச்சோ’, சர்கார், பிகில்ன்னு நிறைய படங்கள் ஒர்க் பண்ணிருக்கேன். இது ஒரு மகிழ்ச்சியான பயணம். அவருக்கு கொரியோகிராஃப் பண்ணும் போது ஒரு சவால் இருக்கும். எல்லா வயசு ரசிகர்களையும் அந்த பாட்டுல திருப்தி படுத்தணும். இதெல்லாம் மனசுல வச்சு தான் அந்த நடனத்தை வடிவமைப்போம்.

நடன இயக்குநர் ஸ்ரீதர்

எந்த ஸ்டெப்பா இருந்தாலும் தளபதி பாத்தாலே ஆடிடுவாரு. அஸிஸ்டெண்ட்ஸ் ஆடுறத சைலண்ட்டா கவனிப்பாரு, கொஞ்சம் கூட பிசிறு தட்டாம அழகா ஆடுவாரு.

நடன இயக்குநர் சதிஷ்

வாழ்க்கைல ஒருமுறையாசும் அவருக்கு ஆக்‌ஷன் சொல்லிடணும்ன்னு இருந்தேன். தலைவா படத்தில் 28 நாள் அவர் கூட இருந்தேன். தமிழ் பசங்க பாட்ட நாங்கெல்லாம் 1 வாரம் பிராக்டீஸ் பண்ணோம். விஜய் சார் பாத்ததும் ஆடிட்டாரு. நா பாத்துட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன். பூமா தேவிக்கு வலிக்காம ஆடுற ஒரே ஆள் அவர் தான்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor vijay

அடுத்த செய்தி