ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆந்திராவில் தொடங்கும் சீயான் 61 பட ஷூட்.. தீபாவளிக்கு வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!?

ஆந்திராவில் தொடங்கும் சீயான் 61 பட ஷூட்.. தீபாவளிக்கு வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!?

விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணி

விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணி

Chiyaan61 | விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கம் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கான பூஜை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

    விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் படத்திற்கான டெஸ்ட் ஏற்கெனவே சூட்  நடைபெற்றது.

    கோலார் தங்க வயல் வரலாற்றை மையமாக வைத்து அந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் பட குழுவினர் படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளனர். அதில் முதல் கட்டமாக சென்னை பூந்தமல்லிக்கு அருகில் உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் விக்ரம் பங்கு பெறும் டெஸ்ட் சூட் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

    இதைத்தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பை, ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் நாளை முதல் தொடங்கி ஒரு வாரத்துக்கு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.பின்பு பட வேலையை முடித்து கொண்டு தீபாவளிக்கு படக்குழுவினர் திரும்ப உள்ளனர்.

    விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்தில் நடிக்க இருந்த நடிகை ராஷ்மிகா கால்ஷீட் இல்லாத காரணத்தினால் விலகினார்.

    Read More: துணிவு ஷூட்டிங் : அது அஜித் சாரா? சென்னையில் குவிந்த கூட்டம்... ஆனா நடந்த கதை வேறு!

     வேறு சில புது ஹீரோயின்களை நடிக்க வைக்க பேசப்படுகிறது.மாளவிகா மோகனனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.நடிகர் விக்ரம் நடிக்க உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Actor Vikram, Pa. ranjith