Home /News /entertainment /

கோப்ரா படப்பிடிப்பை நிறைவுசெய்த விக்ரம்!

கோப்ரா படப்பிடிப்பை நிறைவுசெய்த விக்ரம்!

கோப்ரா படப்பிடிப்பை நிறைவுசெய்த விக்ரம்

கோப்ரா படப்பிடிப்பை நிறைவுசெய்த விக்ரம்

இயக்குனர் அஜய் ஞானமுத்து போட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக செலவளித்ததால் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

  • News18
  • Last Updated :
கோப்ரா படத்தில் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் ஆரம்பிக்கப்படுவது குறித்து 2019 மே மாதம் அறிவித்தார். ஆகஸ்டில் படத்தை தொடங்கி 2020 ஏப்ரலில் படத்தை வெளியிடுவதாகத்தான் திட்டம்.

ஆனால், எதிர்பாராத பிரச்சனைகளால் படப்பிடிப்பு தடைபட்டு இப்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படப்பிடிப்பு தாமதமானதற்கு கொரோனா பேரிடரும் ஒரு காரணம்.



இயக்குனர் அஜய் ஞானமுத்து போட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக செலவளித்ததால் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின் சுமூகமாகி தற்போது விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்துள்ளனர். இதில் விக்ரம் மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு டஜனுக்கும் அதிகமான கெட்டப்புகள் இந்தப் படத்தில் அவருக்கு உள்ளன.



ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கனிகா, மிருளாணினி ரவி, மம்முக்கோயா, ரேணுகா, ரோபோ சங்கர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

Also read... சமந்தா, நயன்தாராவின் காத்துவாக்குல ரெண்டு காதல் புதிய படங்கள்!

இசை ஏ.ஆர்.ரஹ்மான். விக்ரம் படப்பிடிப்பை நிறைவு செய்ததையொட்டி பதிவொன்றை வெளியிட்டார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. "வாவ்! கடைசியில் விக்ரம் சார் கோப்ராவில் தனது படப்பிடிப்பை முடித்துள்ளார்.

Also read... சமந்தாவுக்கு போட்டியாக நடனத்தில் பட்டையை கிளப்பும் ரெஜினா...!

இது எத்தனை மேஜிக்கான அனுபவம். உங்களுடன் பணிபுரிவது மிகவும் விருப்பத்துக்குரியது. நீங்கள் ஒரு நடிப்பு ராட்சசன். இந்த நினைவுகளை என் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருப்பேன்" என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram, Cobra Movie

அடுத்த செய்தி