Home /News /entertainment /

Vikram: வீடு திரும்பிய நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டாரா?

Vikram: வீடு திரும்பிய நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டாரா?

விக்ரம்

விக்ரம்

விக்ரம் டிஸ்சார்ஜ் ஆனதும், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

    நடிகர் சியான் விக்ரம் உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், விக்ரமின் மகன் துருவ் மற்றும் அவரது மேலாளர் இதை மறுத்தனர்.

    பின்னர் விக்ரம் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தற்போது, அவர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நலமுடன் இருக்க வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்தினர்.

    நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை... நலமாக உள்ளார் - மருத்துவமனை அறிக்கை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், விக்ரம் டிஸ்சார்ஜ் ஆனதும், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அது விக்ரமின் சமீபத்திய வீடியோ இல்லை. 2017-ஆம் ஆண்டு 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் தனது பிறந்தநாளை கொண்டாடியதும், தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ தான் அது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vikram

    அடுத்த செய்தி