ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தங்கலான் படத்தின் தோற்றத்திற்கு தினமும் பல மணி நேரம் செலவிடும் விக்ரம்

தங்கலான் படத்தின் தோற்றத்திற்கு தினமும் பல மணி நேரம் செலவிடும் விக்ரம்

தங்கலான் விக்ரம்

தங்கலான் விக்ரம்

தங்கலான் படத்தில் சியான் விக்ரம் தவிர, பார்வதி மேனன், மாளவிகா மோகனன், மற்றும் பசுபதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கலான் திரைப்படத்தின் தோற்றத்துக்காக நடிகர் விக்ரம் தினமும் பல மணி நேரம் செலவழித்து வருவதாகக் கூறியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

சியான் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு 'தங்கலான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்த பீரியட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சியான் விக்ரம் ‘தங்கலான்’ படத்திற்கு தயாராவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்தில் பகிந்துக் கொண்டார். அதாவது 'தங்கலான்' படத்தின் தனது தோற்றத்துக்காக தினமும் 4 மணி நேரம் செலவழித்து வருவதாகவும், ஒவ்வொரு காட்சியிலும் அன்புடனும் ஆர்வத்துடனும் அவர் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக கர்நாடகாவின் KGF-வில் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சியான் விக்ரம் மற்றும் படக்குழுவினருக்கு இது பிஸியான நாட்களாக இருக்கும். படம் 2023-ல் ஏதேனும் முக்கிய விழா காலத்தை முன்னிட்டு, திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் தளபதி 67-ல் முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர்

தங்கலான் படத்தில் சியான் விக்ரம் தவிர, பார்வதி மேனன், மாளவிகா மோகனன், மற்றும் பசுபதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கேஜிஎஃப் பின்னணியில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் கடைசிப் படமான 'சர்பட்டா பரம்பரை' மாபெரும் வெற்றி பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram