ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தண்ணீர் வா வா என்றது... தங்கலான் ஜாலி வீடியோவை பகிர்ந்த விக்ரம்!

தண்ணீர் வா வா என்றது... தங்கலான் ஜாலி வீடியோவை பகிர்ந்த விக்ரம்!

தங்கலான் படத்தில் விக்ரம்

தங்கலான் படத்தில் விக்ரம்

இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கலான் படக்குழுவினருடன் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை பதிவிட்டிருக்கிறார் நடிகர் விக்ரம்.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது அடுத்தப் படமான 'தங்கலான்' படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்கினார். நடிகர் விக்ரம் நடிக்கும் இந்தப் படம் முன்பு 'சியான் 61' என்று அழைக்கப்பட்டது. 1800-களில் நடக்கும் கதையான இதனை, பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படக்குழு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அங்கு நடிகர் சியான் விக்ரம் ஜாலியாக இருப்பது போல் தெரிகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட குழுவினர் தண்ணீரில் ஜாலியாக இருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ள சியான் விக்ரம், ”இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு. கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி, தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?! அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளரை கரம் பிடித்த ’சந்திரலேகா’ ஸ்வேதா பண்டேகர்!

இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படம் 3டியிலும் படமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இந்தியிலும் படமாக்கப்படும் என்றார். இது பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram