ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Chiyaan Vikram: ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற்ற விக்ரம்!

Chiyaan Vikram: ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற்ற விக்ரம்!

கோல்டன் விசா பெறும் விக்ரம்

கோல்டன் விசா பெறும் விக்ரம்

இதனை நடிகை பூர்ணாவும் அவரது கணவரும் துபாய் தொழிலதிபருமான ஷானித்தும் வழங்கியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகம் கோலிவுட் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையில் வழங்கப்படுவது தான் இந்தக் கோல்டன் விசா. முதலீட்டாளர்களின் வர்த்தக நிறுவனம் தோல்வியைச் சந்தித்தால் அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறைந்தால் விசாவின் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

  இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தைவிட்டு வேறு நாட்டில் 6 மாதங்களுக்கு மேல் வசித்தாலும் அவர்களின் விசா ரத்து செய்யப்படாது. இப்படிப்பட்ட கோல்டன் விசாவை நடிகர் விக்ரமுக்கு வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதனை நடிகை பூர்ணாவும் அவரது கணவரும் துபாய் தொழிலதிபருமான ஷானித்தும் வழங்கியுள்ளனர். அதன் படங்களும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

  நான் இன்னும் இறக்கவில்லை... நேர்க்காணலில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா

  தவிர நடிகை பூர்ணா நடிகர் விக்ரமுடன் இன்று மாலை 6.30 மணிக்கு இன்ஸ்டகிராம் மற்றும் முகநூலில் லைவ் செல்வதாக விக்ரம் ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vikram