முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தோனியை சந்தித்த விக்ரம்... வைரலாகும் படம்!

தோனியை சந்தித்த விக்ரம்... வைரலாகும் படம்!

தோனி - விக்ரம்

தோனி - விக்ரம்

விக்ரம் முன்பு ஒரு நேர்காணலில் எம்.எஸ். தோனி தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கிரிக்கெட் வீரர் தோனியுடன் நடிகர் விக்ரம் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பன்முகத்திறமை கொண்ட நடிகர் விக்ரமுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் தல தோனியை சந்தித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனிக்கு, சென்னையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில், அவரும், விக்ரமும் சென்னையில் ஒரே ஹோட்டலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தோனியைச் சந்தித்த விக்ரம், அந்த சிறப்பு தருணத்தில் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார். விக்ரம் முன்பு ஒரு நேர்காணலில் எம்.எஸ். தோனி தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே விக்ரம் மற்றும் தோனி இடையேயான இந்த சிறப்பு சந்திப்பு இருவரின் ரசிகர்களையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர்களின் சந்திப்பின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக, சென்னையில் ஒரே படப்பிடிப்பு தளத்தில் விஜய்யும் தோனியும் இருந்தனர். அப்போது தோனியை சந்திக்க விஜய் ஆசைப்பட, அவரை கேரவனில் சந்தித்தார் தோனி. இந்த சந்திப்பின் படங்களை தல தளபதி என வைரலாக்கினர் ரசிகர்கள்.

Chiyaan Vikram meets MS Dhoni - Picture goes viral, MS Dhoni meets vikram, dhoni, ms dhoni, dhoni vikram, dhoni vikram meeting, dhoni meets vikram, captain cool dhoni vikram, dhoni vikram hd photos, dhoni photos, vikram and dhoni, dhoni and vikram hd images, ms dhoni movie, ms dhoni wife, ms dhoni age, ms dhoni photos, ms dhoni net worth, ms dhoni father, எம் எஸ் தோனி, தோனி விக்ரம், விக்ரம் தோனி சந்திப்பு, தோனியை சந்தித்த விக்ரம், சியான் விக்ரம்

படங்களைப் பொறுத்தவரை, 'மஹான்', 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சீயான் 61' ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார் விக்ரம். இதில் மஹான் அமேசான் பிரைமில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vikram, Dhoni, MS Dhoni