இயக்குநர் சங்கர்-விஜய்-விக்ரம் படம் எப்போது...? விக்ரம் சொன்ன பதில்

நடிகர் விஜய் ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்துள்ளார். முதல்வன் 2 படத்திற்காக இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது

news18
Updated: July 24, 2019, 9:18 PM IST
இயக்குநர் சங்கர்-விஜய்-விக்ரம் படம் எப்போது...? விக்ரம் சொன்ன பதில்
விஜய் - விக்ரம்
news18
Updated: July 24, 2019, 9:18 PM IST
இயக்குநர் சங்கர் உடன் மீண்டும் ஒரு படத்தில் இணையப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் விக்ரம்.

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான கடாரம் கொண்டான் திரைப்படம் கடந்த 19-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் விக்ரமின் நடிப்பு வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது. கடாரம் கொண்டான் படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. கடாரம் கொண்டான் படத்தின் ப்ரோமோஷனுக்காக விக்ரம் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.

விக்ரமுக்கு கேரளாவில் ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த விக்ரம், சங்கர் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்தப்படம் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பிற தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.


மேலும் இயக்குநர் சங்கர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்திற்காக இணைந்துள்ளார். இதையடுத்து அவர் நடிகர் விஜய்யுடன் இணையவுள்ளார். அதை முடித்த பிறகு நான் அவருடன் இணைய வாய்ப்புள்ளது என்று விகர்ம் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்துள்ளார். முதல்வன் 2 படத்திற்காக இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் அதிக அளவில் பரவி வரும் நிலையில் விக்ரமின் இந்த பதில் அதை உறுதிபடுத்தியுள்ளது.

மேலும் சங்கருடன் விஜய் - விக்ரம் இணைந்து பணியாற்றவுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் விக்ரமுடன் சங்கர் இணையும் படம் தான் விஜய்-விக்ரம்-சங்கர் இணையும் படமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Loading...

Also watch

First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...