Home /News /entertainment /

Cobra: நான் ஒரு சாதாரண மேத்ஸ் வாத்தியார்... விக்ரமின் கோப்ரா ட்ரைலர் வெளியீடு!

Cobra: நான் ஒரு சாதாரண மேத்ஸ் வாத்தியார்... விக்ரமின் கோப்ரா ட்ரைலர் வெளியீடு!

கோப்ரா ட்ரைலர்

கோப்ரா ட்ரைலர்

கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இதில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அவர் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். தவிர கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.

    யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?



    படம் வரும் 31-ம் தேதி வெளியாகும் நிலையில் திருச்சி, கோவை, மதுரை என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று கோப்ரா படத்தை புரொமோட் செய்து வருகிறார் நடிகர் விக்ரம். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vikram

    அடுத்த செய்தி