முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Cobra: ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தின் 20 நிமிட காட்சி நீக்கம்

Cobra: ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தின் 20 நிமிட காட்சி நீக்கம்

கோப்ரா படத்தில் விக்ரம் - ஸ்ரீனிதி ஷெட்டி

கோப்ரா படத்தில் விக்ரம் - ஸ்ரீனிதி ஷெட்டி

கோபுர திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் நீக்கம். ரசிகர்கள் விமர்சகர்கள் கருத்துக்கு மதிப்பளித்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோப்ரா திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் மூன்று மணி நேரம் 3 நிமிடம் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் நேரத்தை 40 நிமிடம் குறைக்க தயாரிப்பாளர் லலித் வலியுறுத்தினர். ஆனால் லலித் குமாரின் வேண்டுகோளை இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கவில்லை.

இந்த நிலையில் 3 மணி நேரம் மூன்று நிமிடத்துடன் படம் வெளியானது. அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நீண்ட நேரம் படம் ஓடுகிறது. அது படம் பார்ப்பவர்களுக்கு பெரும் சலிப்பை ஏற்படுத்துவதாக கூறினர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெறும் 20 நிமிட காட்சிகளை தற்போது நீக்கியுள்ளனர். அதுவும் திரை துறையினர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து காட்சிகளை நீக்கி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிமாறனின் விடுதலை படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

அந்த நீக்கப்பட்ட காட்சி இன்று மாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. கோப்ரா படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால்,  புதிதாக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என படக் குழுவினர் நம்புகின்றனர்.

First published:

Tags: Actor Vikram, AR Rahman