Home /News /entertainment /

எவ்வளவோ பார்த்துவிட்டோம், இதெல்லாம் ஒன்றுமே இல்லை - கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேச்சு

எவ்வளவோ பார்த்துவிட்டோம், இதெல்லாம் ஒன்றுமே இல்லை - கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேச்சு

விக்ரம்

விக்ரம்

இதயத்தில் கை வைத்தாலே மாரடைப்பு என கூறிவிடுகின்றனர் எனவும், தன் முகத்தை வைத்து பலர் நன்றாக போடோஷாப் செய்து செய்தி வெளியிட்டதாகவும் விக்ரம் கூறினார்.

  • News18
  • Last Updated :
    மருத்துவமனையில் இருந்தபோது தன்னைப்பற்றி எதை எதையோ பலர் எழுதியதாகவும், அவை நன்றாக இருந்ததாகவும் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

    நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.

    விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 7 அல்லது அதற்கும் அதிகமான தோற்றங்களில் விக்ரம் நடித்திருப்பதாக கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய விக்ரம் தனது உடல்நலம் குறித்த வதந்திகள் தொடர்பாகவும் பேசினார்.

    Also read... தனுஷ் படத்தில் நடிக்கும் சார்பாட்ட பரம்பரை பட நடிகர்

    அப்போது, இதயத்தில் கை வைத்தாலே மாரடைப்பு என கூறிவிடுகின்றனர் எனவும், தன் முகத்தை வைத்து பலர் நன்றாக போடோஷாப் செய்து செய்தி வெளியிட்டதாகவும் கூறினார். எவ்வளவோ பார்த்துவிட்டோம், இதெல்லாம் ஒன்றுமே இல்லை எனவும், நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.

    மேலும்,  என்னை நேசிக்கும் சிலர் இந்த செய்திகளால் சங்கடங்களை சந்தித்தனர். அவர்கள் அனைவருக்கும், நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லவே இந்த மேடைக்கு வந்துள்ளேன். மேலும் எனது குடும்பம், எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகாது என்றும் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie

    அடுத்த செய்தி