கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மகன் ஹீரோ... அப்பா வில்லனா?

சியான் 60 திரைப்படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மகன் ஹீரோ... அப்பா வில்லனா?
தனது மகனுடன் விக்ரம்
  • Share this:
கடாரம் கொண்டான் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பில் கையில் துப்பாக்கியுடன் உள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இதன் மூலம் இத்திரைப்படம் கேங்க்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாகவும், துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இத்தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க: 'இது உங்கள் டிவி ஷோ அல்ல... வேலைய பாருங்க...' லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி

அப்பாவும் மகனும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பிரச்னை முடிந்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading