முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘சியான் 60’ படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் திடீர் மாற்றம்

‘சியான் 60’ படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் திடீர் மாற்றம்

சந்தோஷ் நாராயணன் - அனிருத்

சந்தோஷ் நாராயணன் - அனிருத்

சியான் 60 படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ், “ஆம். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையில் சியான் 60 உருவாகிறது. அவரை எங்களுடைய குழுவிற்கு வரவேற்கிறேன். புரிந்து கொண்டு ஆதரவளித்த அனிருத்துக்கு நன்றி. இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்களுடைய ஆதரவும் அன்பும் தேவை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

திடீரென அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது பதிவில் குறிப்பிடவில்லை. அதேவேளையில் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ படத்தை தவிர பீட்சா, இறைவி, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது. விக்ரமுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்துக்காக தனது தேதிகளை ஒதுக்கியுள்ளார். விக்ரம் - துருவ் விக்ரம் இருவரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Anirudh, Dhruv Vikram, Karthik subbaraj, Kollywood, Music director santhosh narayanan, Vikram