காட்ஃபாதர் - விவேக் ஓபராய் நடித்த வேடத்தில் பிரபல மலையாள நடிகர்!

காட்ஃபாதர்

சமீபத்தில் காட்ஃபாதர் படத்தின் படப்பிடிப்பை மோகன்ராஜா தொடங்கினார். இவர்தான் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படம், மலையாள லூசிபரின் ரீமேக். லூசிபரில் விவேக் ஓபராய் நடித்திருந்த வில்லன் வேடத்துக்கு மலையாளத்தின் முன்னணி நடிகரை தேர்வு செய்துள்ளனர்.

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பொலிடிகல் த்ரில்லர் ஜானரில் அமைந்த இந்தப் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். கதைப்படி மஞ்சு வாரியரின் இரண்டாவது கணவர் இவர். முதல்வராக இருக்கும் தனது மனைவியின் தந்தையின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடத்தல் தொழிலை விஸ்தரிக்க நினைக்கும் வில்லன் கதாபாத்திரம். மஞ்சு வாரியரின் டீன்ஏஜ் மகளை போதைக்கு அடிமையாக்கும், எதற்கும் துணிந்த மனிதர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலுங்கில் இந்த வேடத்தை செய்ய, மலையாளத்தின் பிரபல நடிகர் பிஜு மேனனை தேர்வு செய்துள்ளனர். சின்னச் சின்ன வேடங்களில் நடித்து, நாயகனானவர் பிஜு மேனன். காமெடி, குணச்சித்திரம், ஆக்ஷன் என அனைத்து வேடங்களிலும் கலக்குகிறவர். விவேக் ஓபராயின் வில்லன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யக் கூடிய நடிகர்.



Also read... "35 நாளில் முடிச்சிட்டோம்" - அதிர்ச்சிதந்த இயக்குனர் கண்ணன்!

சமீபத்தில் காட்ஃபாதர் படத்தின் படப்பிடிப்பை மோகன்ராஜா தொடங்கினார். இவர்தான் இந்த ரீமேக்கை இயக்குகிறார். விரைவில் படத்தை முடித்து, அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: