ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமல்ஹாசன் நல்ல நண்பர், 'விக்ரம்' மாதிரியான படத்தில் நடிக்க ஆசை, ஆனால்... - சிரஞ்சீவி அதிரடி

கமல்ஹாசன் நல்ல நண்பர், 'விக்ரம்' மாதிரியான படத்தில் நடிக்க ஆசை, ஆனால்... - சிரஞ்சீவி அதிரடி

கமல்ஹாசன் - சிரஞ்சீவி

கமல்ஹாசன் - சிரஞ்சீவி

எனக்குமே ஒரே மாதிரியான நடனம், சாண்டைக்காட்சிகளில் பங்கேற்று சோர்வாக இருக்கிறது. என்னை உடல் ரீதியாக வறுத்திக்கொள்ளாத வேடங்களை செய்ய விரும்புகிறேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழில் விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவா என ரசிகர்கள் மோதிக்கொண்டிருப்பது போலவே தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யாவா அல்லது பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டியா என ரசிகர்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள். வீர சிம்ஹா ரெட்டி நேற்றும் வால்டர் வீரய்யா இன்றும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகிறது.

இந்த நிலையில் வால்டர் வீரய்யா பட நிகழ்வில் பேசிய சிரஞ்சீவி ஸ்ருதி ஹாசனுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியதாவது, ''ஸ்ருதி ஹாசன் சிறந்த நடிகை. அவருக்கு நடனம் இயல்பாகவே வருகிறது. அது அவரது மரபணுவிலேயே இருக்கிறது. அவர் நண்பர் கமல்ஹாசனின் மகள் என்பதுதான் அதற்கு காரணம். நாங்கள் ஃபிரான்ஸில் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எங்களுக்கு ரிகர்சலுக்கு நேரமே இல்லை. படப்பிடிப்பு தளத்திலேயே கற்றுக்கொண்ட ஸ்ருதி சிறப்பாக நடனமாடினார். அவருடன் இணைந்து சண்டைக்காட்சியிலும் நடித்தேன். அவருடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். அவர் போன்ற நடிகை கிடைப்பது அரிது.

பாபி சிம்ஹா எனது ரசிகர். அவர் படப்பிடிப்புத் தளத்தில் என் வசனங்களை பேசி காட்டுவார். என் பாடல்களையும் பாடுவார். அவர் சிறந்த நடிகர். அவரை திரையில் பார்க்கும்போது உங்களுக்கு பயம் ஏற்படப்போவது உறுதி. என்றார்.

மேலும் நான் எப்பொழுதும் என் வயதுக்கு ஏற்ற வித்தியாசமான வேடங்களை ஏற்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ரசிகர்கள் என்னிடம் வால்டர் வீரய்யா போன்ற படங்களில் காணவே விரும்புவதாக தெரிவிக்கின்றனர். எனக்குமே ஒரே மாதிரியான நடனம், சண்டைக்காட்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று சோர்வாக இருக்கிறது. என்னை உடல் ரீதியாக வறுத்திக்கொள்ளாத வேடங்களை செய்ய விரும்புகிறேன்.

இந்த மாதிரியான குளிரான காலநிலையிலும், அழுக்குபடிந்த இடத்திலும் வேலை செய்ய வேண்டுமென விருப்பமா என்ன ? திரிஷ்யம், விக்ரம் மாதிரியான படங்களைப் போல இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகவோ அல்லது துப்பாக்கிளை பிடித்துக்கொண்டு சுட்டுத்தள்ளுவது போலவோ நடிக்க விரும்புகிறேன். ஆனால் இந்த மாற்றம் எப்பொழுது நடக்கும் என எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் தான் இதனை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

First published:

Tags: Kamal Haasan, Vikram