முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'லூசிபர் திருப்தியில்லை' ஒரிஜினல் படத்தை சீண்டிய சிரஞ்சீவி! கொதித்த மோகன்லால் ஃபேன்ஸ்!

'லூசிபர் திருப்தியில்லை' ஒரிஜினல் படத்தை சீண்டிய சிரஞ்சீவி! கொதித்த மோகன்லால் ஃபேன்ஸ்!

சிரஞ்சீவி - மோகன்லால்

சிரஞ்சீவி - மோகன்லால்

சிரஞ்சீவின் இந்த பேச்சு மலையாள ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மெகா ஸ்டார் சிரஞ்சீவி  மலையாளத்தில் மோகன்லால் நடித்த  லூசிபர் படம் தனக்கு திருப்தியளிக்கவில்லை என பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் சிரஞ்சீவிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த காட்ஃபாதர். மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். லூசிபர் மலையாள பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. குறிப்பாக மோகன்லால் ரசிகர்களுக்கு இந்த படம் தீனி போடும் வகையில் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில்  மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கினார். தெலுங்கில் இதற்கு காட்ஃபாதர் என பெயர் வைக்கப்பட்டது.

'ரூமுக்கு வாங்க'! ஆதி புருஷ் இயக்குனர் மீது கோபப்பட்டாரா பிரபாஸ்? வைரலாகும் வீடியோ!

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் சல்மான் கானும், நயன்தாராவும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காட்ஃபாதர் ஆயுத பூஜை ஸ்பெஷலாக இன்று தெலுங்கில் வெளியாகியுள்ளது.

இந்த நேரத்தில் நேற்றைய தினம் காட்ஃபாதர் பிரஸ் மீட்டில் நடிகர் சிரஞ்சீவி ஒரிஜினல் வெர்ஷன் லூசிபர் படம் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் சிரஞ்சீவி பேசியிருப்பதாவது “ லூசிபர் பார்த்து நான் முழுமையாக திருப்தி அடையவில்லை, நாங்கள் சில் சீன்களை இன்னும் மெருகேற்றி மிகவும் ஈர்க்கக்கூடியதாக மாற்றியுள்ளோம். இது நிச்சயமாக உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும்” என கூறியுள்ளார்.

சிரஞ்சீவின் இந்த பேச்சு மலையாள ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. சிலர் அவருக்கு எதிராக சில கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் படத்தின் விமர்சனமும் தற்போது வெளியாக தொடங்கியுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Mohan Lal Nivin Pauly, Mollywood, Tollywood, Twitter