Home /News /entertainment /

சிரஞ்சீவியின் காட்ஃபாதர் ஓடிடி வெளியீட்டை கைப்பற்றியது நெட் ஃப்ளிக்ஸ்…

சிரஞ்சீவியின் காட்ஃபாதர் ஓடிடி வெளியீட்டை கைப்பற்றியது நெட் ஃப்ளிக்ஸ்…

காட் ஃபாதர் படத்தின் போஸ்டர்

காட் ஃபாதர் படத்தின் போஸ்டர்

இதன் மலையாள வெர்ஷன் அபரிதமான வெற்றியைப் பெற்றதால் காட் ஃபாதர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காட் ஃபாதர் படத்தின் ஓடிடி வெளியீட்டை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபரின், தெலுங்கு ரீமேக்கான ‘காட்பாதர்’ படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் சிரஞ்சீவி நடித்துள்ளார்.

மலையாள நடிகர் மோகன்லாலில் நடிப்பில் கடந்த 2019-ம் வெளியான லூசிபர் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

நடிகை திரிஷா மற்றும் பிரகாஷ்ராஜை கவர்ந்த ரசிகரின் மீம் வீடியோ...

கொனிடலா புரொடக்ஷன் கம்பெனியுடன் இணைந்து ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது.

காட் ஃபாதர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சல்மான் கானும், கதாநாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர் பட அப்டேட்… 2 முக்கிய நடிகர்கள் படத்தில் இணைந்தனர்…

இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. மிகப்பெரும் தொகைக்கு இந்தப் படம் வாங்கப்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமா உலகில் பேசப்படுகிறது.



பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

அதோடு, இப்படம் மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அதில் தனது சொந்த முத்திரையை பதிக்க முயல்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. இதன் மலையாள வெர்ஷன் அபரிதமான வெற்றியைப் பெற்றதால் காட் ஃபாதர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Tollywood

அடுத்த செய்தி