Home /News /entertainment /

எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோதலை தவிர்த்த மெகா ஸ்டார் படம்!

எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோதலை தவிர்த்த மெகா ஸ்டார் படம்!

எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோதலை தவிர்த்த மெகா ஸ்டார் படம்

எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோதலை தவிர்த்த மெகா ஸ்டார் படம்

ஒமைக்ரான் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்தது திரைப்படங்களின் வெளியீட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

  • News18
  • Last Updated :
கொரோனா தொற்று அதிகரித்து வருவது  திரைப்படங்களின் வெளியீட்டில் பெரிய விளையாட்டை நிகழ்த்தியுள்ளது. எந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது படம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியவில்லை. தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ அல்ல கொரோனாவும், ஊரடங்கும்தான் படவெளியீட்டை தீர்மானிக்கின்றன.

சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் ஆச்சார்யா சென்ற வருட இறுதியிலேயே திரைக்கு வந்திருக்க வேண்டும். பல காரணங்களால் பட வெளியீட்டை 2022 பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றுதான் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவனும் வெளியாகிறது.

ஆச்சார்யா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 4 தமிழகத்தில் வெளியாகியிருந்தாலும் எதற்கும் துணிந்தவன் வசூலை அது பாதிக்கப் போவதில்லை. அதேநேரம், எதற்கும் துணிந்தவன் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் சவாலாக ஆச்சார்யா இருந்திருக்கும்

ஒமைக்ரான் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்தது திரைப்படங்களின் வெளியீட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆர்ஆர்ஆர், வலிமை, ராதே ஷ்யாம், பீம்ல நாயக் உள்பட பல படங்கள் தங்களின் வெளியீட்டை தள்ளி வைத்தன. எ

தற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4 திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் இன்றுவரை கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆச்சார்யா படத்தை பிப்ரவரி 4 இல் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Also read... சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் சுவாரஸிய அப்டேட்...!

ஆந்திர அரசு திரையரங்குகளின் அதிகபட்ச கட்டணமே ரூபாய் 100க்குள் இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதித்ததால் தெலுங்குப் படங்கள் ஆந்திராவில் பெரும் வசூல் சரிவை கண்டுள்ளன.

பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆச்சார்யா பிப்ரவரி 4 வெளியீட்டிலிருந்து ஏப்ரலுக்கு தள்ளிப் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். திட்டமிட்டபடி பிப்ரவரி 4 எதற்கும் துணிந்தவன் வெளியானால் அதன் தெலுங்குப் பதிப்புக்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் போட்டியே இருக்காது. இது சன் பிக்சர்ஸுக்கு நல்ல செய்தி.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya, Chiranjeevi sarja

அடுத்த செய்தி