Home /News /entertainment /

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிரஞ்சீவியின் காட் ஃபாதர்!

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிரஞ்சீவியின் காட் ஃபாதர்!

காட் ஃபாதர்

காட் ஃபாதர்

சிரஞ்சீவியின் காட் ஃபாதர் டீஸரில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    காட் ஃபாதர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபரின், தெலுங்கு ரீமேக்கான ‘காட்பாதர்’ படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் சிரஞ்சீவி நடித்து வருகிறார். மலையாள நடிகர் மோகன்லாலில் நடிப்பில் கடந்த 2019-ம் வெளியான லூசிபர் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. கொனிடலா புரொடக்ஷன் கம்பெனியுடன் இணைந்து ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது.

    காட் ஃபாதர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சல்மான் கானும், கதாநாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். நேற்று சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. டீசரைப் பார்த்த ரசிகர்கள், திரையில் படத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாக இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு தொடக்கம்!

    சிரஞ்சீவியின் காட் ஃபாதர் டீஸரில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தனி ஒருவன் புகழ் இயக்குனர் மோகன் ராஜா, இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் களமிறங்குகிறார். அதோடு, இப்படம் மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அதில் தனது சொந்த முத்திரையை பதிக்க முயல்கிறார். இதன் மலையாள வெர்ஷன் அபரிதமான வெற்றியைப் பெற்றதால் காட் ஃபாதர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara

    அடுத்த செய்தி