Home /News /entertainment /

நடிகர் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரா படத்திற்கு டப்பிங் பேசிய சிரஞ்சீவி

நடிகர் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரா படத்திற்கு டப்பிங் பேசிய சிரஞ்சீவி

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

தென்னிந்திய நடிகர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்திற்கு தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி டப்பிங் பேசியுள்ளார். 

    ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷனுடன் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற சூப்பர்ஹீரோ திரைப்படத்தை இந்தியில் தயாராகியுள்ளது.

    இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். மூன்று பாகங்களாக இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிடைக்கும் சூப்பர் பவரை வைத்து அநீதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

    3டி, ஐமேக்ஸ் 3டி, 2டி என 3 பார்மெட்களில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதனை மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

    Also read... கைதியின் காதலியில் அண்ணன், தங்கையாக நடித்த நட்சத்திர தம்பதி!

    இந்நிலையில், இந்தப் படத்திற்கு தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி டப்பிங் பேசியுள்ளார். 300 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியுள்ள இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)






    இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி பேசும் டப்பிங் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Alia Bhatt, Chiranjeevi sarja

    அடுத்த செய்தி