ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி - வைரலாகும் நியூ லுக்!

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி - வைரலாகும் நியூ லுக்!

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

வால்டர் வீரய்யா படத்துக்குப் பிறகு சூட்டோடு சூடாக நடிகர் சிரஞ்சீவி அடுத்ததாக நடிக்க உள்ள படம் ‘போலா சங்கர்’. இந்தப் படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித்தின் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ள சிரஞ்சீவியின் புதிய கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவா என ரசிகர்கள் மோதிக்கொண்டிருப்பது போலவே தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யாவா அல்லது பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டியா என ரசிகர்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள். வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியான நிலையில், ஒரு நாள் கழித்துதான் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் வெளியானது. இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகிறது.

வால்டர் வீரய்யா படத்துக்குப் பிறகு சூட்டோடு சூடாக நடிகர் சிரஞ்சீவி அடுத்ததாக நடிக்க உள்ள படம் ‘போலா சங்கர்’. இந்தப் படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் இந்தப்படம் ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனனன் நடித்த நிலையில் தெலுங்கு பதிப்பில் அந்தக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதேபோல தமிழில் ஸ்ருதி ஹாசன் நடித்த கதாப்பாத்திரத்தில் தெலுங்கில் தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக மொட்டை அடித்த சிரஞ்சீவியின் கெட்டப் சமூக வலைளதங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also read... இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Chiranjeevi sarja