சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் கணவரின் பெயரை நீக்கியது விவாகரத்து வதந்திகளைத் தூண்டியுள்ளது. இதனால் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த ஜோடி மார்ச் 2016-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
விவாகரத்து வதந்திகள் குறித்து சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீஜா இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியை மாற்றிய பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது முந்தைய இன்ஸ்டாகிராம் ஹேண்டில், “ஸ்ரீஜா கல்யாண்” என்று இருந்தது. இருப்பினும், திங்கட்கிழமை, அவர் தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என்று மாற்றியுள்ளார். அதோடு இன்ஸ்டாகிராமில் கல்யாணை அவர் அன்ஃபாலோ செய்ததையும் ரசிகர் ஒருவர் கவனித்திருக்கிறார்.
Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!
மார்ச் 2016-ல், பெங்களூரு, தேவனஹள்ளிக்கு அருகில் உள்ள குடும்பத்தின் பண்ணை வீட்டில் ஸ்ரீஜா, கல்யாணை திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண விழாவில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். விழாவின் படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன. ஸ்ரீஜாவின் சகோதரரும் தெலுங்கு நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசனா, அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷ் ஆகியோர் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.
Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...
நவம்பர் 2018-ல், தானும் ஸ்ரீஜாவும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக முகநூலில் அறிவித்தார் கல்யாண். கல்யாணுக்கு முன் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காதலனை மணந்தபோது அவருக்கு வயது 19. இருப்பினும், அவரது மாமியார் வரதட்சணை கேட்பதாக சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிந்தார். அதோடு சிரிஷுக்கு எதிராக ஒரு துன்புறுத்தல் வழக்கையும் தொடர்ந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவதாக வெளியான செய்திக்கு மத்தியில் ஸ்ரீஜாவின் விவாகரத்து பற்றிய வதந்திகளும் வெளியாகியுள்ளன. 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள், பிரிவதாக நேற்றிரவு அறிவித்தனர். இந்த செய்தியை உறுதிப்படுத்தும்படி ஒரே மாதிரியான அறிக்கைகளையும் அவர்கள் வெளியிட்டனர். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு
சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.