ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டீர்களா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயி

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டீர்களா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயி

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

Singer Chinmayi : வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்பவர்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சின்மயி பிரபல பின்னணி பாடகர் ஆவார். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.குரு படத்தில் இவர் பாடிய ‘மையா மையா’ பாடல் மிகுந்த வரவேற்புகள பெற்றது. சின்மயி பாடகி மட்டுமில்லாமல் வாய்ஸ் ஆர்டிஸ்டாகவும் பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சின்மயி சமூகத்தின் மீதுள்ள தனது கருத்துகளை வெளிப்படையாக பேசக்கூடியவர்.பல சர்ச்சை விமர்சனங்களை அடிக்கடி பெறுவார். எதையும் கண்டுக்கொள்ளாத சின்மயி தனக்கு தோன்றும் கருத்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துக்கொள்வார்.

இந்நிலையில் சின்மயி தனது சமூக வலைதளங்களில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இரட்டை குழந்தையில் ஒரு ஆண், ஒரு பெண் பிறந்துள்ளதாகவும் சின்மயி பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளார்

அதுமட்டுமில்லாமல் குழந்தையின் கைகளை பிடித்தவாறு இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தனக்கு ட்வின்ஸ் பிறந்துள்ளதாக அறிவித்துள்ள சின்மயிடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா என்று மெசேஜில் கேட்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சின்மயி போஸ்ட்  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் கர்ப்பமாக இருப்பதைப் போன்ற படங்களை வெளியிடாததால், வாடகைத் தாய் மூலம் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததா என்று என்னிடம் கேட்கும் இந்த நபர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன்.

நான் என்னைப் பாதுகாத்துக் கொண்டதால் என் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது குடும்பம், எனது நண்பர்கள் வட்டம் ஆகியவற்றால் எப்போதும் பாதுகாக்கப்படுவேன். மேலும் எங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் நீண்ட காலத்திற்கு எங்கள் சமூக வலைதளங்களில் இருக்காது’’. ஆப்ரேஷன் நடைப்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் தனது இரட்டை குழந்தைகள் உலகிற்குள் நுழைந்தபோது தான் பஜனை பாடியதாகவும் தெரிவித்துள்ளார் சின்மயி.

also read : இரட்டை குழந்தைக்கு தாயான பாடகி சின்மயி.. குவியும் வாழ்த்துக்கள்




 
 

 

 


View this post on Instagram


 

 

 

 

A post shared by Chinmayi Sripada (@chinmayisripaada)



சின்மயி இந்த பதிவிக்கு பலரும் கமெண்டில் தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Chinmayi, Singer Chinmayi