முகப்பு /செய்தி /entertainment / ’நம் அனைவருக்காகவும் பிரியா ரமணி முன்னெடுத்த போராட்டம் இது’ - சின்மயி..

’நம் அனைவருக்காகவும் பிரியா ரமணி முன்னெடுத்த போராட்டம் இது’ - சின்மயி..

சின்மயி

சின்மயி

“இந்திய நீதிமன்றங்களுக்கு, நீதிபதிகளுக்கு நன்றி. நம் அனைவருக்கான நீதிக்கும், குழந்தைகளுக்கான நீதிக்குமாக பிரியா ரமணி இப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார் சின்மயி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தன் மீது பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கைத் தொடுத்தார் முன்னாள் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர். அவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளித்திருக்கும் டெல்லி நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து குற்றமற்றவர் என பிரியா ரமணியை விடுவித்துள்ளது. தமிழகத்தில் Metoo இயக்கத்தின் தொடக்கமாக வைரமுத்து மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாடகி சின்மயி தனது ட்வீட்டில், “இந்திய நீதிமன்றங்களுக்கு, நீதிபதிகளுக்கு நன்றி. நம் அனைவருக்கான நீதிக்கும், குழந்தைகளுக்கான நீதிக்குமாக பிரியா ரமணி இப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக அக்பர் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள டெல்லி நீதிமன்றம், பிரியா ரமணி இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அவதூறு வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான பல பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தியப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “Metoo” என்ற பெயரில் டுவிட்டர் தளத்தில் பகிர்ந்தனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த MeToo இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் குற்றம் சாட்டப்பட்டனர்.

அந்த வகையில், பிரபல பத்திரிகையாளராக இருந்து பாஜகவில் இணைந்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்த மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரும் MeToo பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்

எம்.ஜே. அக்பர் மீது அவரது தலைமையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் பிரியா ரமணி MeToo இயக்கத்தில் அளி்த்த புகாரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அக்பருடன் பணியாற்றியபோது, நான் பாலியல் தொந்தரவுகளை சந்தித்தேன் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சில பெண் பத்திரிகைாயளர்களும் அக்பரால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளையும்பதிவிட்டனர். இதைதொடர்ந்து, பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கை தொடர்ந்தார் அக்பர். பிரியா ரமணியின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த அக்பர், தனது புகழுக்கும், மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அக்பர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டமும் வலுத்ததைத் தொடர்ந்ந்து, 2018, அக்டோபர் 18-ஆம் தேதி தனது மத்திய அமைச்சர் பதவியையும் அக்பர் ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கின் விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதன்பின் டெல்லி முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு 2019, மே 4-ஆம்தேதி மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ரோஸ் அவென்யு நீதிமன்ற நீதிபதி விஷால் பூஜா கடந்த 2019, நவம்பர் 18-ம் தேதி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி ரவிந்திர குமார் நியமிக்கப்பட்டார். அக்பர் தரப்பிலும், பிரியா ரமணி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பிரியா ரமணி விடுவிக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: Chinmayi, Chinmayi sripaada, Meetoo, Vairamuthu