ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Chilla Chilla: உள்ளுக்குள்ள ஃபயரு, தெறிச்சு ஓடும் ஃபியரு... வெளியானது துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல்...

Chilla Chilla: உள்ளுக்குள்ள ஃபயரு, தெறிச்சு ஓடும் ஃபியரு... வெளியானது துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல்...

துணிவு அஜித்

துணிவு அஜித்

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால், வீரம்-ஜில்லா படங்களுக்குப் பிறகு அஜித்தும் விஜய்யும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவதை பார்க்க எதிர்பார்த்து காத்திக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் துணிவு படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாததால் அதிருப்தியில் இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!

' isDesktop="true" id="852689" youtubeid="I7dRB7mTtLE" category="cinema">

இதையடுத்து துணிவு படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் இன்று வெளியாகும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் அனிருத் பாடியுள்ள இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ajith