Home /News /entertainment /

அதர்வாவின் குருதி ஆட்டத்தை குழந்தைகளும் பார்க்கலாம்!

அதர்வாவின் குருதி ஆட்டத்தை குழந்தைகளும் பார்க்கலாம்!

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

அதர்வாவின் சமீபத்திய படங்கள் எதுவும் ஓடாத நிலையில், ஒரு வெற்றி நிச்சயம் தேவைப்படும் சூழலில் குருதி ஆட்டம் வெளியாகிறது.

அதர்வா நடித்திருக்கும் ஆக்ஷன் படம் குருதி ஆட்டம். இதன் பெயரும், போஸ்டர்களில் வெளிப்பட்ட வன்முறையும் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் தான் கிடைக்கும் என எண்ண வைத்தன. மாறாக 'யு/ஏ' சான்றிதழ் வாங்கி பார்டரில் தப்பித்திருக்கிறது படம்.

8 தோட்டாக்கள் படத்தை இயக்கி ஸ்ரீ கணேஷின் இரண்டாவது படம் குருதி ஆட்டம். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து படத்தை எடுத்திருக்கிறார். அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கியமான காபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ராதாரவி நடித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான படங்களில் குருதி ஆட்டமும் ஒன்று. ஒருவழியாக படத்தை டிசம்பர் 24 வெளியிடுவதாக அறிவித்தனர்.

ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமிருப்பதால் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களின் துணையுடன் படத்தைப் பார்க்கலாம். நம்மூரில் 'யு/ஏ' என்பதை 'யு' சான்றிதழாகவே திரையரங்குகள் பாவிப்பதால் குழந்தைகளும் குருதி ஆட்டத்தை ரசிக்கலாம்.

மேலும் பார்க்க - வடிவேலுவை சந்தித்த பிக்பாஸ் மதுமிதா- வைரல் புகைப்படம்

Atharvaa Kuruthi Aattam, Kuruthi Aattam movie, kuruthi aattam, kuruthi aattam full movie, kuruthi aattam movie download, kuruthi aattam full movie online, kuruthi aattam trailer, kuruthi aattam full movie download tamilrockers, kuruthi aattam ott release date, kuruthi aattam movie download kuttymovies, kuruthi aattam tamilyogi, Actor Atharva, Atharvaa movies, actor Atharva movies, atharva address, atharva address first single, Atharva, நடிகர் அதர்வா, அதர்வா குருதி ஆட்டம், குருதி ஆட்டம் திரைப்படம், அதர்வா திரைப்படங்கள், நடிகர் அதர்வா திரைப்பட பட்டியல், அதர்வா
குருதி ஆட்டம்


அதர்வாவின் சமீபத்திய படங்கள் எதுவும் ஓடாத நிலையில், ஒரு வெற்றி நிச்சயம் தேவைப்படும் சூழலில் குருதி ஆட்டம் வெளியாகிறது. படத்தைக் குறித்து வரும் தகவல்கள் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தருகின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Atharvaa

அடுத்த செய்தி