• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • A Quiet Place Part II படத்தை குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை!

A Quiet Place Part II படத்தை குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை!

தி கொயட் பிளேஸ் 2

தி கொயட் பிளேஸ் 2

இந்தப் படம் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

  • Share this:
    A Quiet Place Part II படத்தை குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை.
    2018-ல் தி கொயட் பிளேஸ் படம் வெளியானது. சுமார் 17 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இந்த ஹாரர் படம் உலகம் முழுவதும் ஓடி சுமார் 350 மில்லியன் டாலர்களை சம்பாதித்தது. இதற்குப் பிறகு இதன் இரண்டாவது பாகத்தை எடுக்காமல் விடுவார்களா?

    2021 மே மாதம் யுஎஸ்ஸில் திகொய்ட் பிளேஸ் 2 வெளியானது. இரண்டாவது பாகத்தை சுமார் 60 மில்லியன் டாலர்கள் செலவில் எடுத்திருந்தனர். முதல்வார இறுதியில் இப்படம் யுஎஸ்ஸில் 47.55 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதுவரை உலக அளவில் 297.1 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ஆரோக்கியமான வசூல்.

    இந்தப் படம் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. தி கொயட் பிளேஸ் படம் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அதில் ஒரு சிக்கல். படத்துக்கு இந்திய தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் 18 வயதுக்குட்பட்டவர்கள் படத்தைப் பார்க்க அனுமதியில்லை. பயமுறுத்தும் ஹாரர் காட்சிகள் நிறைந்துள்ளதால் இந்த முடிவு.

    தி கொய்ட் பிளேஸ் 2 படத்தின் ரன்னிங் டைம் 1 மணி 37 நிமிடங்கள். 'ஏ' சான்றிதழ் காரணமாக படத்தின் இந்தியன் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: