முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பர படத்தில் நடிக்கிறார் தமிழக முதல்வர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பர படத்தில் நடிக்கிறார் தமிழக முதல்வர்

முதல்வர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் விக்னேஷ் சிவன்

முதல்வர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் விக்னேஷ் சிவன்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக உருவாக்கப்படும் விளம்பரப் படத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நடிக்கிறார். மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்த விளம்பர படம் உருவாக்கப்படுகிறது. 

  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் விக்னேஷ் சிவன்தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் விளம்பர படத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிக்கிறார். 

இந்த மாத இறுதியில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.  இதற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

அதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் பெறுவது போன்ற காட்சிகள் உள்ளன. அந்த படப்பிப்பில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.  இதற்கான படப்பிடிப்பு இன்று சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்று வருகிறது.

Also read... விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான செயலி, சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்

மு.க ஸ்டாலினை வைத்து விக்னேஷ்  உருவாக்கும் அந்த விளம்பர திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.  நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால் சில மணி நேரங்கள் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற உள்ளது. அந்த விழாவையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: CM MK Stalin, Director vignesh shivan