ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆர்ஆர்ஆர் படம் தள்ளிப்போனதற்கு முதல்வரின் முடிவு காரணமா?

ஆர்ஆர்ஆர் படம் தள்ளிப்போனதற்கு முதல்வரின் முடிவு காரணமா?

ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் இருந்தாலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் வசூல் அனைத்தையும் விட முக்கியமானது.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் இருந்தாலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் வசூல் அனைத்தையும் விட முக்கியமானது.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் இருந்தாலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் வசூல் அனைத்தையும் விட முக்கியமானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு முழுவீச்சில் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முடிவே முக்கிய காரணம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

கொரோனா பாதிப்பால் அனைத்துத் திரைப்படங்களும் பாதிக்கப்பட்டது போல் ஆர்ஆர்ஆர் படமும் பாதிக்கப்பட்டது. முதலில் 2020 இறுதியில் படம் திரைக்கு வருவதாக இருந்து, 2021 தொடக்கத்தில் வெளியாகும் என்றனர். பிறகு அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்பு 2022 ஜுனவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக  பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்தன. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்தன. ஏற்கனவே மகாராஷ்டிராவில் 50 சதவீத பார்வையாளர்கள்தான் அனுமதிக்கப்பட்டு வந்தனர். டெல்லி போன்ற மாநிலங்கள் முழுமையாக திரையரங்குகளை மூடும் முடிவை எடுக்க உள்ளன.

ஆர்ஆர்ஆர் பெரிய பட்ஜெட் திரைப்படம். இந்த கட்டுப்பாடுகள் படத்தின் வசூலை கண்டிப்பாக பாதிக்கும் ஆகவே, அவர்கள் படவெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுதான் படம் தள்ளிப்போவதற்கான காரணம் என குறிப்பிடவில்லை. அதேநேரம் விமர்சகர்கள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முடிவை சுட்டிக் காட்டுகின்றனர். ஆந்திராவில் டிக்கெட் கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணமே 90 ரூபாய் தான் என்கிறார்கள். இதனால் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில் வெளியான புஷ்பா, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் இந்த குறைந்த கட்டணத்தால் போட்ட பணத்தை எடுக்கவே திணறின.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் இருந்தாலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் வசூல் அனைத்தையும் விட முக்கியமானது. இப்போதிருக்கும் குறைக்கப்பட்ட கட்டணத்தில் போட்ட பணத்தை எடுப்பது சிரமம். அதன் காரணமாகவே பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க - இவரின் சுயரூபம் விஸ்ரூபம் எடுத்தது.. யாரை தாக்குகிறார் கமல்?

2020-ல் சிரஞ்சீவி தலைமையில் ராஜமௌலி உள்பட தெலுங்கு திரையுலகினர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பலங்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அதில் ஒன்று பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் ஒன்று. அதற்கு அனுமதி அளிப்பதற்குப் பதில் இருந்த கட்டணத்தையும் குறைத்துள்ளார் ஆந்திர முதல்வர். இதுவே ஆர்ஆர்ஆர் பட வெளியீட்டை தள்ளி வைக்க முக்கிய காரணம் என்கிறார்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Rajamouli