கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்தனா ராஜ், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அறிக்கையின்படி, திங்கள்கிழமை (மே 16) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேத்தனா, அங்கு ‘ஃபேட் ஃப்ரீ’ அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவரது நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியதால், உடலில் சில மாற்றங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்காத நடிகை, நண்பர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு உயிரைப் பறிக்கும் சிக்கல்களை உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகை சேத்தனா ராஜின் பெற்றோர் தங்கள் மகளின் அகால மரணத்திற்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்று கூறுகின்றனர். அதோடு மருத்துவமனைக்கு எதிராக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
முதன்முறையாக தனது குடும்ப படத்தை வெளியிட்ட நீலிமா ராணி!
தற்போது, சேத்தனாவின் உடல் மருத்துவமனையில் உள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கீதா, டோரேசானி போன்ற சீரியல்களில் சேத்தனா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.