செஸ் ஒலிம்பியாட் பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இடம்பெறும் இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி, ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் வரும் 28-ம் முதல் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு முதன் முறையாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கமான ஃபிடே (FIDE), ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்களில் இதுபோன்று நடத்தப்பட்டதில்லை.
Maaveeran Title Announcement | எதிர்த்து நின்றான் மாவீரன்... வெளியானது சிவகார்த்திகேயனின் டைட்டில் வீடியோ!
தமிழகத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டி என்ற நிலையில் தமிழக அரசு இப்போட்டி நிகழ்வுகளை பிரபலப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பர பதாகைகள், லோகோக்கள், மாரத்தான் போட்டிகள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
வாரிசு படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சரத்குமார்... இயக்குனர், தயாரிப்பாளர் வாழ்த்து...
அவ்வகையில் இதற்கான லோகோ, சதுரங்க குதிரை வடிவ தம்பி என்ற பெயருடன் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாகவும், போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையிலும், முக்கிய அரசு துறை அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி உள்ளிட்டோர் இடம்பெறும் இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.