Home /News /entertainment /

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கமல் ஹாசன் குரலில் தமிழ்நாட்டு வரலாறு!

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கமல் ஹாசன் குரலில் தமிழ்நாட்டு வரலாறு!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

Chess Chennai 2022: நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

    Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் தமிழகத்தில் வரலாறு நடிகர் கமல் ஹாசனின் குரலில் ஒலித்தது.

    சென்னை, மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து செஸ் போட்டியில் கலந்துக் கொள்ளும் சர்வதேச வீரர்களும், பார்வையாளர்களும் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். வெளிநாட்டு போட்டியாளர்கள் பலர், தமிழக அரசின் ஏற்பாடுகளை பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    செஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட படம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் துவக்க விழாவில் தமிழ்நாட்டின் வரலாறு குறித்த ஆடியோ - வீடியோ ஒளிபரப்பானது. அதற்கு நடிகர் கமல் ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Chess Olympiad 2022, CM MK Stalin, Kamal Haasan

    அடுத்த செய்தி