Home /News /entertainment /

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்னும் பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் - உதயநிதி ஸ்டாலின்!

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்னும் பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் - உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட படம்

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட படம்

நடிகர் கமல் ஹாசன் குரலில், தமிழர் வரலாறு குறித்த ஆடியோ பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்றவாறு கலைஞர்கள் பெர்ஃபார்ம் செய்தனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்னும் பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

    சென்னை, மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் 2022 துவக்க விழா நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோர் கலந்துக் கொண்டனர். அவர்களுடன் ரஜினிகாந்த், வைரமுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்துக் கொணடனர்.

    செஸ் துவக்க விழாவில் இந்தியாவின் பாரம்பரிய கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் குரலில், தமிழர் வரலாறு குறித்த ஆடியோ பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்றவாறு கலைஞர்கள் பெர்ஃபார்ம் செய்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு செஸ் ஆன்தம் பாடலையும் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

    செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கமல் ஹாசன் குரலில் தமிழ்நாட்டு வரலாறு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பணியாற்றிய கிரியேட்டிவ் டீமுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலின், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை அதிதி ஷங்கர் மற்றும் குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள உதய், நிறைவு விழா இன்னும் பெரிதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Chess Olympiad 2022, Udhayanidhi Stalin, Vignesh Shivan

    அடுத்த செய்தி