Home /News /entertainment /

Chess Chennai 2022: செஸ் சென்னை தீம் பாடலை வெளியிட்டு முதல்வருக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

Chess Chennai 2022: செஸ் சென்னை தீம் பாடலை வெளியிட்டு முதல்வருக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

செஸ் சென்னை 2022

செஸ் சென்னை 2022

Chess Chennai 2022: சென்னை நேப்பியர் பாலம் செஸ் தீமில் மாற்றி அமைக்கப்பட்டு அங்கு செஸ் தீம் பாடல் படமாக்கப்பட்டிருந்தது.

    வணக்கம் செஸ் சென்னை என்ற செஸ் ஒலிம்பியாட் ஆன்தம் பாடலை ட்விட்டரில் பகிர்ந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    சென்னை, மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் போட்டியில் கலந்துக் கொள்பவர்களையும், பார்வையாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்கும் வகையில் ’வணக்கம் செஸ் சென்னை’ என்ற தீம் பாடல் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர்களை வரவேற்று அழைக்கும் வகையில் இப்படலில் இடப் பெற்றுள்ளார். அதோடு இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பரதநாட்டிய கலைஞராக தோன்றியுள்ளார்.

    ஆப் டெவலப்பராக விஜய்... எதிர்பார்ப்பை கிளப்பும் வாரிசு!

    சமீபத்தில் வணக்கம் செஸ் சென்னை பாடலின் டீசனை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். சென்னை நேப்பியர் பாலம் செஸ் தீமில் மாற்றி அமைக்கப்பட்டு அங்கு தீம் பாடல் படமாக்கப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாமல், இரவு நேரத்தில் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைப்பெற்றன.



    செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து!

    இதற்கிடையே தற்போது முழு வணக்கம் செஸ் சென்னை தீம் பாடலையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “செஸ் சென்னை 2022, உலகையே நமது சென்னைக்கு கொண்டு வருகிறது. இது போன்ற ஒரு சிறப்பான சர்வதேச நிகழ்வுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், செஸ் வீரர்களுக்கும் மற்றும் இந்தியாவை பெருமைப்படுத்த உழைக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman, Chess Olympiad 2022, CM MK Stalin

    அடுத்த செய்தி