க.பெ/ரணசிங்கம் டீசர் : புழுதி வாசனை உணர்ந்தேன் - தேசிய விருது பெற்ற இயக்குநர் புகழாரம்

க.பெ/ரணசிங்கம் டீசரைப் பார்த்து பிரபல இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • Share this:
பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவகளுடன் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படம் குறித்து கூறிய ஜிப்ரான், “படம் பார்த்து விட்டு, பின்னணி இசைக்கான பணிகளைத் தொடங்குகிறேன். 'அறம்' படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் அரசியல்வாதிகள், அதிகார மையத்தை எதிர்த்து மக்கள் போராடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.


டீசரைப் பார்த்த இயக்குநர் சேரன், “க/பெ ரணசிங்கம் படத்தின் முன்னோட்டம்.. விஜய்சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேசும் மிரட்டி எடுத்திருக்காங்க.. புதிய அறிமுகம் இயக்குனர் தம்பி விருமாண்டிக்கு வாழ்த்துக்கள். கிராமத்தின் புழுதி வாசனை நுகர்ந்தேன்” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading