முகப்பு /செய்தி /entertainment / 'எதற்கு உயிரை இழந்தீர்கள் என உங்கள் மேல் கேள்வியும் பரிதாபமும்தான் வருகிறது’ - மகாத்மா காந்தி குறித்து சேரன் பதிவு..

'எதற்கு உயிரை இழந்தீர்கள் என உங்கள் மேல் கேள்வியும் பரிதாபமும்தான் வருகிறது’ - மகாத்மா காந்தி குறித்து சேரன் பதிவு..

சேரன்

சேரன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உங்கள் ரத்தக்கறை படிந்த நாட்டில் இன்று துடைக்கமுடியாத ஏகப்பட்ட கறைகள்.. இந்த ஜனங்களுக்காக எதற்கு உயிரை இழந்தீர்கள் என உங்கள் மேல் கேள்வியும் பரிதாபமும்தான் வருகிறது. . சரி.. உங்கள் கடமையை நீங்கள் செய்தீர்கள்.. எங்கள் கடமையை நாங்கள் மறந்தோம் என்பதே உண்மை.. உம்மைச்சொல்லி குற்றமில்லை. என்று மகாத்மா காந்தி குறித்து பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காந்தி அய்யா.. என மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் ட்வீட் செய்திருக்கும் இயக்குநர் சேரன், “எங்களுக்காக நீங்கள் இழந்ததை நாங்கள் இன்னும் உணரவே இல்லை.. நீங்கள் பெருமைப்படும்படி நாங்கள் ஏதும் செய்துவிடவில்லை.. இன்னும் குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் நடத்தி நாங்கள் அதை நீதி வென்றதென சொல்லிக்கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மகாத்மா காந்தி பிறந்தநாளான இன்று #MahatmaGandhi என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டாவதுடன், #நாதுராம்கோட்சேஜிந்தாபாத் (#नाथूराम_गोडसे_जिंदाबाद) என்னும் ஹேஷ்டேகும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

First published:

Tags: Director cheran