Home /News /entertainment /

கனமழையில் காரில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் சமயோஜிதமாக எடுத்த முடிவு..

கனமழையில் காரில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் சமயோஜிதமாக எடுத்த முடிவு..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

கனமழையில் காரில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பொதுப்போக்குவரத்தின் முக்கியத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

சென்னையை பொறுத்தவரையில் பல இடங்களில் மழை நீர் குளமாக தேங்கி நின்றதால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக விமான நிலையத்திலிருந்து கிண்டி செல்லும் சாலை, எழும்பூர், வேப்பேரி, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டனர்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். தொடர் கனமழையாலும், போக்குவரத்து நெரிசலாலும் காரில் செல்ல முடியாத நிலை ஏற்படவே உடனடியாக சமயோஜிதமாக யோசித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காரை விடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அதை இன்ஸ்டாகிராமில் புகைப்பட பதிவாகவும் அவர் எழுதியுள்ளார். அதில் விமான நிலையம் செல்ல சிறந்த வழி மெட்ரோ ரயில்தான் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.



முன்னணி நடிகை என்ற செருக்கு, ஆடம்பரமின்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை கூறி, பயணம் செய்தது அவரது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress Aishwarya Rajesh, Chennai Rain, Cyclone Nivar

அடுத்த செய்தி