சென்னை பிரபல காசி தியேட்டர் உரிமையாளர் பழனியப்பன் இன்று காலமானார்.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று காசி தியேட்டர் என்றே சொல்லலாம். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி தியேட்டரை அறியாத சினிமா ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் வெளிவரும் நாட்களில் ஈக்காட்டுத்தாங்கல் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு, இந்த திரையங்களில் முதல்நாள் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்து காணப்படுவார்கள்.
சினிமா ரசிகர்கள் தங்களது விருப்ப நடிகர்களின் படங்கள் வெளியாவதை பேனர் கட்டி, கட்-அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து, மேளம் தாளம், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவதை வேடிக்கை பார்ப்பதற்கென்றே இங்கு பெரும் கூட்டம் திரளும். ஏன், பல முன்னணி நடிகர்களும் தங்களது படங்களின் முதல் நாள்காட்சியை இந்த தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து பார்க்க விரும்பி வருவதும் உண்டு.
இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வீட்டில் ஏற்பட்ட சோகம்… ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
இப்படி பல அனுபவங்களை நடிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் அளித்த காசி தியேட்டரின் உரிமையாளர் பழனியப்பன் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.