ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு இசை வெளியீட்டு விழா... பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

வாரிசு இசை வெளியீட்டு விழா... பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

வாரிசு இசை வெளியீட்டு விழா

வாரிசு இசை வெளியீட்டு விழா

varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விஜயின் 'வாரிசு' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க நேரு விளையாட்டு அரங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தன.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழாவின் போது, ரசிகர்கள் சிலர் உற்சாக மிகுதியில் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால், வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக, நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின், தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

First published:

Tags: Actor Vijay, Audio lunch, Varisu