முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம்.. நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுரை

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம்.. நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுரை

விஜய்

விஜய்

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு எனவும் காட்டமாக பதிலளித்தது.

  • Last Updated :

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதோடு, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு எனவும் காட்டமாக பதிலளித்தது. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Vijay