நெஞ்சுக்கு நீதி படத்தை
சென்னை மேயர் பிரியா பாராட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவு உதயநிதி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார்.
இந்தப் படம் தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் உருவானது. இதனை கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…
அவருடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நெஞ்சுக்கு நீதி படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க - பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸிற்கு ‘மாலத்தீவை’ அவ்ளோ பிடிச்சிருச்சாம்!
பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வெள்ளியன்று வெளியான இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அழுத்தமான கதையை உதயநிதியின் வழியே இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியிருப்பதாக பாராட்டுகள் குவிந்துள்ளன.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கதாப்பாத்திரத்துடன் ஒன்றி உதயநிதி நடித்திருக்கிறார். அவரது சினிமா கெரியரில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும் என பல்வேறு தரப்பினர் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மேயர் பிரியா, நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எல்லோரும் சமம்னா யாரு சார் ராஜா?’ என்ற படத்தின் டயலாக்கை குறிப்பிட்டு, உதயநிதி அண்ணனின் நடிப்பு நெருப்பாக இருந்தது. கதையை பரபரப்பாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் சொல்லியுள்ளார். பார்ப்பதற்கு அற்புதமான படம். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.