லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்துவரும் விக்ரம் படத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் இணைந்துள்ளார்.
மாநகரம் , கைதி , மாஸ்டர் படங்களின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் விக்ரம் . கமல் , பகத் பாசில் , விஜய் சேதுபதி இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் . இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது . இந்தப் படத்தில் புதிதாக மலையாளத்தின் பிரபல நடிகர் செம்பன் வினோத் இணைந்துள்ளார் .
செம்பன் வினோத் நடிகர் மட்டுமல்ல . லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அங்கமாலி டை ரிஸ் , அஷ்ரப் ஹம்சா இயக்கியிருக்கும் பீமன்டெ வாளி ஆகிய படங்களின் திரைக்கதையையும் செம்பன் வினோத் எழுதியுள்ளார் . இது தவிர பல படங்களில் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் .
மலையாளத்தில் வில்லன் , நாயகன் , குணச்சித்திரம் என அனைத்துவகை நடிப்பிலும் கொடிகட்டியவர் தமிழில் கோலிசோடா 2 படத்தில் நடித்தார் . இப்போது விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார் . விக்ரமில் ஏற்கனவே பகத் பாசில் , நரேன் , காளிதாஸ் ஜெயராம் , ஆண்டனி வர்கீஸ் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர் . ஐந்தாவதாக இப்போது செம்பன் வினோத்தும் சேர்ந்துள்ளார் .
Also read... ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுரேஷ் கோபி...?
விக்ரமை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது . அனிருத் இசையமைக்கிறார் . க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார் . செம்பன் வினோத் திரைக்கதை எழுதி , தயாரித்திருக்கும் பீமன்டெ வாளி படத்துக்கும் க்ரிஷ் கங்காதரனே ஒளிப்பதிவு செய்துள்ளார் . விக்ரம் படம் அடுத்த வருடம் திரைக்கு வருகிறது . Published by: Vinothini Aandisamy
First published: October 27, 2021, 12:09 IST
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan , Lokesh Kanagaraj