சின்ன மச்சான் பாடல் வரிசையில் வெளியான ’சார்லி சாப்ளின் 2’ பட பாடல் - வீடியோ

சார்லி சாப்ளின் 2 படத்தின் புதிய பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சின்ன மச்சான் பாடல் வரிசையில் வெளியான ’சார்லி சாப்ளின் 2’ பட பாடல் - வீடியோ
சார்லி சாப்ளின் 2 பட போஸ்டர்
  • News18
  • Last Updated: December 8, 2018, 4:46 PM IST
  • Share this:
சார்லி சாப்ளின் 2 படத்தின் புதிய பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான படம் சார்லி சாப்ளின். அந்த படத்தை அடுத்து சார்லி சாப்ளின் 2 தற்போது உர்வாகி வருகிறது. பிரபுதேவா நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை நிக்கி கல்ராணி, அடா ஷர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சார்லி சாப்ளின் பட இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்குகிறார்.

அம்ரீஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பாடியிருந்த சின்ன மச்சான் என்ற பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஐ வாண்ட் மேரி மாமா என்ற பாடலியும் படக்குழுவினர் வெளியிட்டனர்.


தற்போது இவளா, இவளா பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணியுடன் இணைந்து நடனத்தில் அசத்தியுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை நடிகர் பிரபுதேவா எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published: December 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading