Akshay Kumar: அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அக்‌ஷய் குமார்

பெல் பாட்டம் எண்பதுகளில் நடக்கும் ஸ்பை த்ரில்லர் கதை. இதில் அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர், ஹூமா குரோஷி, லாரா தத்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.

  • Share this:
    அக்‌ஷய் குமாரின் தலையீடு காரணமாக பெல் பாட்டம் படத்தின் வெளியீட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக உள்ள பல படங்களில் பெல் பாட்டமும் ஒன்று. இந்தப் படத்தை 2019 நவம்பரில் அறிவித்து, 2020 ஆகஸ்டில் படப்பிடிப்பை தொடங்கினர். 2021 ஜனவரி 26-ம் தேதி படத்தை வெளியிடுவதாக திட்டம். கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. படம் தயாரான போது, திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத நிலை உருவானது. முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாக இருந்ததால், சகஜநிலை திரும்ப பல மாதங்கள் ஆகும், திரையரங்குகள் திறக்க ஆறு மாதத்துக்கு மேலாகும் என கணக்குப் போட்ட படத்தின் தயாரிப்பாளர், "வேறு வழியில்லை, பெல் பாட்டத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளோம்" என அறிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பிரபல இணையதளம் ஒன்று, பெல் பாட்டம் படத்துக்காக 117 கோடிகள் சம்பளமாகப் பெற்ற அக்‌ஷய், படம் ஓடிடியில் வெளியாவதால் சம்பளத்தில் 30 கோடி விட்டுத் தந்துள்ளார் என செய்தி வெளியிட்டது. இதில் கடுப்பான அக்‌ஷய், பட வெளியீட்டுத் திட்டத்தையே மாற்றியுள்ளார். அதாவது, ஓடிடிக்குப் பதில் பெல் பாட்டம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று அறிவித்தார். அத்துடன் ஜுலை 27-ம் தேதி படம் திரையங்குக்கு வரும் என தேதியையும் அறிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெல் பாட்டம் எண்பதுகளில் நடக்கும் ஸ்பை த்ரில்லர் கதை. இதில் அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர், ஹூமா குரோஷி, லாரா தத்தா உள்பட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித் எம்.திவாரி படத்தை இயக்கியுள்ளார். அக்‌ஷய் குமாரின் படங்கள் திரையரங்கில் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும். இது தவிர வெளிநாடு உரிமை, டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகள் மூலம் இன்னொரு 100 கோடியை வசூலிக்கும். ஓடிடியில் மட்டும் வெளியானால் இதில் 30 சதவீதம் வரை இழக்க நேரிடும், சம்பளமும் குறையும்.

    பெல் பாட்டத்தை திரையரங்கில் வெளியிட இதுவும் முக்கிய காரணம் என்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: