Home /News /entertainment /

சந்திரமுகி திரைப்படத்தின் டெலிடட் சீன்.. இப்படியொரு மாஸ் சீனை நீக்க என்ன காரணம்?

சந்திரமுகி திரைப்படத்தின் டெலிடட் சீன்.. இப்படியொரு மாஸ் சீனை நீக்க என்ன காரணம்?

சந்திரமுகி

சந்திரமுகி

இந்த சீன் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று ரஜினியை குச்சி என்று சொன்னதற்காக இது நீக்கப்பட்டு இருக்கலாம்

    கிளைமேக்ஸ் காட்சி வரும் வரை, சந்திரமுகி திரைப்படத்தில் உடன் நடித்த அனைவருக்குமே பயங்கரமாக 'ஸ்க்ரீன் ஸ்பேஸ்' கொடுத்து, சற்றே ஒதுங்கி நின்று பெர்ஃபார்மன்ஸ்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வேட்டையனாக வேடமிட்டு "லக லக லக" என்று சவுண்ட் விட்டு என்ட்ரி கொடுத்த பின்னர் ஒருவருக்கும் ஸ்க்ரீனும் கிடையாது, ஸ்பேஸும் கிடையாது; ரஜினி, ரஜினி, ரஜினி மட்டும் தான்!

    இப்படியாக ரசிகர்களால் இன்ச் இன்ச் ஆக கொண்டாடப்பட்ட சூப்பர் ஸ்டார் படங்களில் கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சந்திரமுகிக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு.

    அப்படியான சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு காட்சி நீக்கப்பட்டுள்ளது என்று கூறினால் என்ன செய்வீர்கள்? அதிலும் ரஜினியின் அறிமுக சண்டை காட்சியில் ஒரு சீன் டெலிட் செய்யப்பட்டுள்ளது என்று கூறினால் என்ன செய்வீர்கள்?

    உடனே பார்த்துவிட வேண்டும் என்று துடிப்பீர்கள் அல்லவா? வெளியே தேட வேண்டாம். இக்கட்டுரையிலேயே டெலிட் செய்யப்பட்ட சந்திரமுகி படக்காட்சியின் டிவிட்டர் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து ரசிக்கவும்!

    முன்னரே குறிப்பிடப்படி டெலிட் செய்யப்பட்ட சந்திரமுகி பட காட்சியானது, ரஜினிகாந்த் இன்ட்ரோ சீனில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் ஒன்றாகும். அடியாட்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு ரஜினி ஸ்டைலாக நிற்பார், அதன் பிறகு சம்பவ இடத்திற்கு அவரது நண்பர் பிரபு வருவார் அல்லவா? அந்த இரண்டு காட்சிகளுக்கு நடுவே படமாக்கப்பட்ட ஒரு 'சீன்' தான் திரைப்படத்தில் இருந்து 'கட்' செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சி முடிந்தாலும் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை!

    தன்னை எதிர்த்தவர்களை பந்தாடிவிட்டு நிற்கும் ரஜினியின் முன், அடியாட்களை அனுப்பிய வில்லன் திமிராக வந்து நிற்க, "இடுப்பு எலும்பை உடைச்சிட்டான் முதலாளி, கை எலும்பை உடைச்சிட்டான் முதலாளி" என்று அடிவாங்கிய நபர்கள் கூற, அதைக்கேட்டு கடும் கோபத்தில் கைகளை முறுக்குகிறார் அந்த வில்லன்.

    சிங்கம் போல கர்ஜித்து கொண்டே ரஜினியை நோக்கி வந்த வில்லன், சற்றும் அசராமல் நிற்கும் ரஜினியின் கால்களில் டக்கென்று விழுகிறார்.

    பின் "தூரத்தில் இருந்து பார்த்தால் குச்சி போல தெரிஞ்சீங்க, கிட்ட வந்து பார்த்ததும் தான் புயல்னு தெரிஞ்சுது. 20 பேரை அடிச்ச உங்களுக்கு என்னை அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்... அண்ணே! உங்க பேரு என்ன அண்ணே?" என்கிறார்.

    இதையும் படிங்க.. ஆர்ஆர்ஆர் படம் எப்போது வெளியாகும்? - முக்கிய அறிவிப்பு!

    அதற்கு ந தலைவர் ஸ்டைல் ஆக "சரவணன்" என்கிறார். உடனே அந்த வில்லன் "அட! நம்ம ஆறுபடையப்பன் பேரு!" என்று பழைய படையப்பா படத்தை நினைவுபடுத்துகிறார்.

    பின்னர் வழக்கம் போல, சரண்டர் ஆகும் வில்லன்களுக்கு ப்ரீ அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் "உனக்கு நீ என்ன நடக்க கூடாதுனு நினைக்கிறீயோ.. அது மத்தவங்களுக்கும் நடக்க கூடாதுனு நினை!" என்று கூறி இடத்தை காலி செய்கிறார் ரஜினிகாந்த். அத்துடன் அந்த காட்சி முடிகிறது.



    இந்த சீன் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று ரஜினியை குச்சி என்று சொன்னதற்காக இது நீக்கப்பட்டு இருக்கலாம், அல்லது இதை விட சூப்பர் ஆன ஒரு சீனை படத்தில் வைப்பதற்காக இது ஓரங்கட்டப்பட்டு இருக்கலாம்! இதில் உங்கள் கருத்து என்ன?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Rajini Kanth

    அடுத்த செய்தி