ரஜினியுடன் நடித்த இந்த குழந்தை நட்சத்திரத்திற்கு திருமணம் ஆகிடுச்சா?

சந்திரமுகி படத்தில்...

சந்திரமுகி படத்தில் ’அத்திந்தோம்’ பாடலில் ‘பொம்மி’ எனும் குழந்தை நடசத்திரமாக நடித்திருந்தவர் பிரகர்ஷிதா.

 • Share this:
  ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’ படத்தில் குழந்தை நட்சத்திரம் பொம்மியாக நடித்த பிரகர்ஷிதாவுக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு, “சந்திரமுகி” திரைப்படம் வெளியாகி, பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி படு ஹிட்டானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார்.

  சந்திரமுகி படத்தில் ’அத்திந்தோம்’ பாடலில் ‘பொம்மி’ எனும் குழந்தை நடசத்திரமாக நடித்திருந்தவர் பிரகர்ஷிதா. படத்தில் குறைந்த நேரமே தோன்றினாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார். அதோடு, வேலன், ராஜராஜேஷ்வரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  இந்நிலையில் தற்போது பிரகர்ஷிதாவுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து பிரகர்ஷிதாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: