Home /News /entertainment /

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெறுகிறாரா த்ரிஷா?

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெறுகிறாரா த்ரிஷா?

த்ரிஷா

த்ரிஷா

Chandramukhi 2 : பாகுபலி புகழ் கீரவானி இசையமைக்கவுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்கிறது.

    லாரன்ஸ் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் த்ரிஷா இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பி.வாசு இயக்கத்தில், ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் சந்திரமுகி படத்தின் முதல் பாகம் 2005ல் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.

    இந்த திரைப்படம் கன்னட படமான அபமித்ராவின் ரீமேக்காக அமைந்தது. அபமித்ரா படம் மலையாள படமான மணுசித்ரதாழுவின் ரீமேக்காக எடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க - முதன்மை கதாப்பாத்திரத்தில் அம்மு அபிராமி நடிக்கும் 'குதூகலம்' 

    குடும்பக்கதை, பாட்டு, ஃபைட், சென்டிமென்ட், சஸ்பென்ஸ், த்ரில்லர் என அனைத்து அம்சங்களையும் கொண்ட ரஜினி படமாக சந்திரமுகி வெளியானது. இதற்கு முன்பு ரஜினியின் மெகா ஹிட்டாக அமைந்த படையப்பா படத்தின் வசூலை சந்திரமுகி முறியடித்தது.

    சந்திரமுகி வெற்றிப் படமாக அமைந்த பின்னர் அதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. அதில் ரஜினி நடித்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று ரசிகர்கள் விரும்பினர்.

    இதையும் படிங்க - வைரலாகும் விக்கி – நயன்தாரா ஹனிமூன் ஃபோட்டோஸ்… 

    இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்றும், படத்தை பி.வாசு இயக்குவார் என்றும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பாகுபலி புகழ் கீரவானி இசையமைக்கவுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்கிறது.

    இதில் லாரன்சுக்கு கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக நடிப்பதற்கு கியாரா அத்வானி மற்றும் த்ரிஷாவிடம் பேசப்பட்டு வருகிறது. இதில் த்ரிஷா படத்தில் இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அடுத்த ஆண்டு சந்திரமுகி 2 திரைப்படம் கோடையையொட்டி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress Trisha

    அடுத்த செய்தி