சந்திரமுகி 2 லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள் என்பதைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த சந்திரமுகி திரைப்படத்தை இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்குகிறார் என்ற அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. அதேபோல் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார் என்றும் கூறி இருந்தனர். ஆனால் அப்போது வேறு நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் வடிவேலும் இணைந்து நடிக்கிறார்.
also read : கோயம்புத்தூர் டூ கோலிவுட்! திவ்ய பாரதி பற்றிய தகவல்கள்..
சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலு நடித்த காமெடிகள் இன்றும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் இந்த சந்திரமுகி திரைப்படத்தில் சிறப்பான நகைச்சுவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை பி.வாசு இயக்க லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். மேலும் படத்திற்கு பாகுபலி திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசை அமைக்கிறார்.
Positive Vibes ✨ & Happy Faces 😇 all around #Chandramukhi2 🗝️✨
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu 😎
Directed by #PVasu 🎬
Music by @mmkeeravaani 🎶
Cinematography by @RDRajasekar 🎥
Art by #ThottaTharani 🎨
PRO @proyuvraaj 🤝🏻 pic.twitter.com/pf57zgJ7xC
— Lyca Productions (@LycaProductions) June 14, 2022
அதேபோல் பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்.டி. ராஜசேகர், சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
சந்திரமுகி 2 திரைப்படத்தில் வடிவேலு இணைந்துள்ளார் என்றும், அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது என்றும் News 18 ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.