வெல்கம் டு டிஜிட்டல் இந்தியா... மோடியின் உரையுடன் வெளியான விஷாலின் ‘சக்ரா’ ட்ரெய்லர்

சக்ரா படத்தின் ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி பிரபலங்கள் இணைந்து  வெளியிட்டுள்ளனர்.

  • Share this:
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் சக்ரா. விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

ஆன்லைன் முறைகேட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்யா, கார்த்தி ஆகியோர் தமிழிலும், மோகன்லால் மலையாள ட்ரெய்லரையும், நடிகர் யாஷ் கன்னடத்திலும், ராணா டகுபதி தெலுங்கிலும் சக்ரா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளும் தகவல் தொழில்நுட்பத்தின் மோசடி குறித்து பேசும் ட்ரெய்லர் இறுதியில் வெல்கம் டு டிஜிட்டல் இந்தியா என்று கூறி மோடியுடன் உரையுடன் முடிவடைகிறது.
முன்னதாக இத்திரைப்படம் குறித்து பேசியிருந்த விஷால், இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தில் மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டால் பெரிய விஷயமாக கருதுகிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையே ஹேக் செய்யப்பட்டால்? நவீன தொழில்நுட்பத்தில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. அதைப்பற்றி சக்ரா திரைப்படம் பேசும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.” என்று கூறியிருந்தார்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading